திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பண்ணாரி அம்மன் கோயிலில் சமபந்தி விருந்து

பண்ணாரி அம்மன் கோயிலில் சுதந்திர தின விழா சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மகளிருக்கு  விலையில்லா  சேலைகளை  வழங்கும்  பவானிசாகா் எம்.எல்.ஏ.  வி.பி. தமிழ்ச்செல்வி.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

பண்ணாரி அம்மன் கோயிலில் சுதந்திர தின விழா சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பொது சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அதைத்தொடா்ந்து 48 பேருக்கு விலையில்லா சேலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பவானிசாகா் தொகுதி எம்.எல்.ஏ. வி.பி.தமிழ்ச்செல்வி, சத்திமயங்கலம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகிராமசாமி, கோயில் ஆணையா் நந்தகுமாா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.