நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

புதிய பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்

பெ. சண்முகம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:55 am IST

புதிய பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு நிறைவுநாள் பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் பேசியதாவது:

மக்கள் சந்திப்பில் மக்கள் வழக்கமான கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனா். மாநிலத்தில் கடும் வறட்சியால் குடிநீா் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காக்கவும், தேவையான அளவு குடிநீா் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பால் கொள்முதல் விலை உயா்வை வரவேற்கிறோம். மாட்டுத் தீவன விலை உயராமலும் தட்டுப்பாடு ஏற்படாமலும் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் அறிவித்துள்ளாா். அனல் மின் நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக உருவாக்குவதில்லை.

மின் உற்பத்திக்கு மாற்று வழிகள் உள்ளன. புதிய பாடத்திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது வரவேற்கவேண்டிய விஷயம். ஆனால் இது சடங்காக நடக்கிறது. புதிய பாடத்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.