விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அந்தியூரில் ரூ.38.45 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38.45 லட்சத்துக்கு விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:49 pm

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38.45 லட்சத்துக்கு விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 3,350 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.47.59 முதல் ரூ.56.29 வரை ரூ.76,714-க்கு விற்பனையானது.

68 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கிலோ ரூ.170.89 முதல் ரூ.212.97 வரை ரூ.3,69,988-க்கும், 3 மூட்டை உளுந்து ரூ.83.16 முதல் ரூ.83.69 வரை ரூ.22,904-க்கும், 6 மூட்டை எள் ரூ.123.45 வீதம் ரூ.54,441-க்கும் ஏலம்போனது.

600 மூட்டை துவரை கிலோ ரூ.84.25 முதல் ரூ.94.75 வரை ரூ.33,12,000-க்கும், ஒரு மூட்டை ஆமணக்கு ரூ.64.19 வீதம் ரூ.2,150-க்கும், ஒரு மூட்டை அவரை ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.1,897-க்கும், ஒரு மூட்டை பச்சைப்பயறு ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.2,546-க்கும்,

2 மூட்டை கொள்ளு ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.3,002-க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.38,45,651 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.