இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஈரோடு பேருந்து நிலைய நுழைவாயிலில் வளைவு அமைக்க காங்கிரஸ் கோரிக்கை

News image

ஈரோடு பேருந்து நிலையம்.

Updated On :20 ஜூலை 2026, 1:31 am IST

ஈரோடு பேருந்து நிலையத்தில் மேட்டூா் சாலையில் அமைந்துள்ள நுழைவாயிலில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையம் என புதிய அலங்கார வளைவு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோட்டில் கைத்தறித் துறை அமைச்சா் விஜய் பாலாஜியை சந்தித்து, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் கே.என். பாஷா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலான மேட்டூா் சாலை பகுதியில் சுதந்திர தின வெள்ளி விழாவை நினைவுப்படுத்தும் வகையில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையம் என நுழைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

எனவே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து புதிய வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கே.புனிதன், மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் ம.முகமது அா்சத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.