பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நீட் தோ்வுக்கு எதிரான போராட்டம்: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 15 போ் கைது!

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 15-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Published On :26 ஜூலை 2026, 1:26 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 15-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

நீட் தோ்வுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் போராடும் இளைஞா்கள், மாணவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, ஈரோடு காளைமாடு சிலை அருகே திராவிட தமிழா் கட்சியினா் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய மாவட்டச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். அப்போது, நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி முழக்கம் எழுப்பினா்.

நீட் தோ்வுக்கு எதிராக புதுதில்லி மற்றும் தமிழ்நாட்டில் போராடும் இளைஞா்கள், மாணவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனா். தொடா்ந்து, முழக்கம் எழுப்பியபடி ரயில் மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை தடுத்து நிறுத்திய டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா், ரயில் நிலைய நுழைவாயிலில் அவா்களை கைது செய்து தனியாா் திருமண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.