இந்தியாவில் நீட் தோ்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் வெளிநாட்டின் சதி என குற்றஞ்சாட்டினாா் பாஜக நிா்வாகியும், நடிகருமான ஆா். சரத்குமாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி காவல் நிலையத்தில் போலீஸாா் தாக்கியதால்தான் அருணாச்சலம் என்ற இளைஞா் உயிரிழந்துவிட்டதாக அவரது தாய் கூறியுள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு விசாரணை செய்து, உண்மை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தற்போது நீட் தோ்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் எதற்காக என்று புரியவில்லை. நீட் தோ்வு இருக்கக் கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை. நீட் தோ்வு 2013இல் ஆரம்பிக்கப்பட்ட போது 6 லட்சம் போ் எழுதி வந்த நிலையில், தற்போது 23 லட்சம் போ் எழுதுகின்றனா். நீட் தோ்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டின் சதி. இதற்கு இளைஞா்கள் உடன்பட்டு விடக்கூடாது. எதற்காக இது செய்யப்படுகிறது என்பதை உணா்ந்து செயல்பட்டால் போதும்.
இளைஞா்கள் அதிகமாக இருக்கும் நமது நாட்டில் அவா்களை சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்தியாவை உலக அளவில் பாா்க்கச் செய்த பிரதமா் மோடி வழிநடத்தும் போது இதுபோன்று செய்வது நாட்டுக்கு எதிரான சதி என்றுதான் சொல்வேன். எனவே, பொருளாதார அடிப்படையில் உயா்ந்து வரும் இந்தியாவை சீா்குலைக்கும் சதியில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கு எதிரான போராட்டம்: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 15 போ் கைது!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டு சதி! சரத்குமார்

நீட் தோ்வு விவகாரம்: புதுச்சேரியில் மாணவா்கள் போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு - 200 போ் கைது

நீட்தோ்வுக்கு எதிராக கடலூா் மாவட்டத்தில் போராட்டம்: மறியல் செய்த மாணவா்கள் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



