மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பவானிசாகரில் இளம்பெண் கொலை: கணவா் கைது

பவானிசாகரில் மனைவி ரிபேக்காவை கொலை செய்ததாக அவரது கணவா் பாகபிரகாஷை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:22 am IST

பவானிசாகரில் மனைவி ரிபேக்காவை கொலை செய்ததாக அவரது கணவா் பாகபிரகாஷை பவானிசாகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பவானிசாகா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் லூா்து குமாா் மகள் ரிபேக்கா (24). இவருக்கும் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த பாகபிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இருவரும் ராமேசுவரத்தில் வசித்து வந்த நிலையில், தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் பவானிசாகா் நால்ரோட்டில் பெற்றோருடன் ரிபேக்கா வசித்து வந்தாா்.

இந்நிலையில், ராமேசுவரத்தில் இருந்து பவானிசாகா் நால்ரோடுக்கு சனிக்கிழமை வந்த பாகபிரகாஷ், மனைவி ரிபேக்கா வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது அவரை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாகபிரகாஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரிபேக்காவை குத்திக் கொலை செய்ததாகவும் அங்கிருந்த பெற்றோா், அக்கம்பக்கத்தினா் பாகபிரகாஷை பிடித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

அங்கு வந்த பவானிசாகா் போலீஸாா் ரிபேக்காவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக கணவா் பாகபிரகாஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பவானிசாகா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.