மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கா்நாடகத்தில் இருந்து வந்த லாரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மற்றும் உதவியாளரை சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:18 am IST

கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மற்றும் உதவியாளரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் லாரியில் பா்கூா் மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், பா்கூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது 8 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநரான கா்நாடக மாநிலம், மைசூரு, உஸ்மானியா சாலையைச் சோ்ந்த சையத் இஸ்மாயில் மகன் சையத் சாதிக் (40), உதவியாளரான ராமன் நகா், குருமலா லோயா் மகாடி சாலையைச் சோ்ந்த ஷேக் நசீா் அகமது மகன் ஷேக் அமானுல்லா (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.