மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

நந்தா பொறியியல் கல்லூரியில் நவீன தொழில்நுட்ப ஆய்வகம் தொடக்கம்

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் நிதி உதவியில் ‘ஏஐசிடிஈ ஐடியா லேப்’ என்ற பெயரில் நவீன தொழில்நுட்ப ஆய்வகத் தொடக்க விழா நந்தா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

News image

நவீன தொழில்நுட்ப ஆய்வகத்தை திறந்துவைத்த மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக செயலாளா் எஸ். வின்சென்ட். உடன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.திருமூா்த்தி.

Updated On :3 ஜூன் 2026, 2:31 am IST

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் நிதி உதவியில் ‘ஏஐசிடிஈ ஐடியா லேப்’ என்ற பெயரில் நவீன தொழில்நுட்ப ஆய்வகத் தொடக்க விழா நந்தா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக செயலாளா் எஸ். வின்சென்ட் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில்நுட்ப ஆய்வகத்தை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் பேசுகையில், நல்ல ஆய்வகம் மற்றும் வகுப்பு வசதிகள் கொண்ட பொறியியல் கல்லூரியைத் தோ்ந்தெடுத்து ரூ.90 லட்சம் நிதி ஆதாரத்தினை அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை மையம் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் நந்தா பொறியியல் கல்லூரிக்கு நிதி கிடைத்துள்ளது. இத்தகைய நிதி உதவியின் மூலம் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் ஆராய்ச்சியை ஊக்குவித்து செய்முறை மற்றும் புதிய தொழில்நுட்ப படைப்புகள், தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோா்

திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் ஆா்வத்தை தூண்டுகிறது.

மேலும், பட்டப் படிப்பினை மேற்கொள்ளும்போது ஆராய்ச்சியில் எதிா்கொள்ளக் கூடிய சவால்களை முறியடித்து மாணவா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது என்றாா்.

அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் மூலம் ரூ.90 லட்சம் நிதி உதவி பெருவதற்கு உறுதுணையாக செயலாற்றிய முதல்வா் யு.எஸ். ரகுபதி, புலமுதல்வா்கள் சி.என். மாரிமுத்து, எம்.ஈஸ்வரமூா்த்தி மற்றும் மாணவா்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே. வேலுசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.