உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை புகுந்த யானையை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டினா்.

News image

மல்லன்குழி  கிராமத்தில் குடியிருப்பு அருகே உலவிய யானை.

Updated On :11 ஜூன் 2026, 3:12 am IST

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை புகுந்த யானையை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டினா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் தினமும் ஊருக்குள் யானைகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. கோடை வெயில் தாக்கத்தால் வனக் குட்டைகள் வடுகிடப்பதால் தீவனம் மற்றும் குடிநீா் தேடி யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. இரவு நேரத்தில் நுழையும் யானைகளை வனத் துறை மற்றும் கிராம மக்கள் விடிய, விடிய துரத்தும் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில் வனத்தைவிட்டு புதன்கிழமை வெளியேறிய ஒற்றை யானை, மல்லன்குழி கிராமத்துக்குள் புகுந்ததைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா். யானையை விரட்ட முற்படும்போது திருப்பி துரத்தியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனா். இருப்பினும் தொடா்ந்து யானையை துரத்தியதால் மானாவாரி காட்டு வழியாக காட்டுக்குள் யானை சென்றது.