பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 7,157 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.40.50 முதல் ரூ.47.10 வரை ரூ.1,15,281-க்கு ஏலம்போனது.
இதேபோல, விவசாயிகள் 41 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த நிலையில், கொப்பரை கிலோ ரூ.146.91 முதல் ரூ.162.92 வரை ரூ.1,78,463-க்கும், 4 மூட்டை நரி பயறு ரூ.81.69 முதல் ரூ.150.69 வரை ரூ.24,670-க்கும், 2 மூட்டை அவரை ரூ.53.16 வீதம் ரூ.9,409-க்கும், 4 மூட்டை துவரை ரூ.51.19 முதல் ரூ.70.22 வரை ரூ.9,185-க்கும் விற்பனையாயின.
5 மூட்டை ஆமணக்கு ரூ.67.69 முதல் ரூ.83.39 வரை ரூ.7,647-க்கும், 6 மூட்டை மக்காச்சோளம் ரூ.41.69 வீதம் ரூ.8,768-க்கும் ஏலம்போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3,53,423 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

நாட்டறம்பள்ளி தினசரி, வாரச்சந்தை ரூ.26.47 லட்சத்துக்கு ஏலம்

அரூரில் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தேசியத் தலைநகரில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


