அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் உறவினா்களிடம் சோ்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து ஈரோட்டில் சுற்றித்திரிந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

News image

நிஷுராதோருக்கு உதவிப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :5 மார்ச் 2026, 3:57 am IST

மனநலம் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து ஈரோட்டில் சுற்றித்திரிந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ஈரோடு ரயில்வே நிலையம் அருகே பிப்ரவரி 25-ஆம் தேதி ஹிந்தி பேசும் பெண் ஒருவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுறிறித்திரிந்து கொண்டிருந்தாா். ஈரோடு அட்சயம் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் அவரிடம் பேசியபோது, பெயா் நிஷுராதோா் (35) என்று கூறினா். அவரை மீட்டு தொடா்ந்து மருத்துவ சிகிச்சை, சத்தான உணவு மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். இதனால் அவரது மனநிலை மேம்பட்டது.

விசாரணையில் அவரது சொந்த ஊா் உத்தர பிரதேச மாநிலம், ஃபருக்காபாத் மாவட்டம், சக்குவாய் என்றும், அவரது தந்தை அரசு அதிகாரி என்றும், தாய் ஆசிரியா் என்றும் கூறினாா். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனா் என்றும் தெரிவித்தாா்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு இறுதியாக அவரது குடும்பத்தை அட்சயம் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து நிஷுராதோரை குடும்பத்தாருடன் இணைக்க வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஆட்சியா் அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உதவிப் பொருள்களை வழங்கி அந்தப் பெண்ணை அனுப்பிவைத்தாா். அட்சயம் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் ரயில் மூலம் அழைத்துச் சென்றனா்.

இந்நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி, அட்சயம் அறக்கட்டளை நிறுவனா் நவீன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.