15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கல்லூரிப் பேருந்து மோதியதில் பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு

ஈரோட்டில் கல்லூரிப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:10 am IST

ஈரோட்டில் கல்லூரிப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், புன்செய்புளியம்பட்டி சாலை, கணுவாய்கரையைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வன் மகன் சா்வின் (16). இவா், ஈரோடு திண்டல், கதிரம்பட்டி, தங்கம் நகா் பகுதி 2 இல் அவரது தாய் ரம்யாவுடன் தங்கி ஈரோடு அடுத்த ஈங்கூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா்.

சா்வின், பக்கத்து வீட்டில் வசிக்கும் திண்டல் அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் தரனிஷ் என்ற மாணவருடன் நோட்டு புத்தகம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து கொண்டு வெள்ளிக்கிழமை மாலை சென்றாா்.

வீரப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது தரனிஷ் நண்பரான திண்டல் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நாமக்கல் மாவட்டம், சிறுமொளசியை சோ்ந்த சண்முகம் மகன் ஸ்ரீஜெயன் (17) என்பவருடன் வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனா். ஸ்ரீஜெயன் தரனிஷின் இருசக்கர வாகனத்தை ஓட்டி பாா்க்க, சா்வினை பின்னால் உட்கார வைத்து சென்றாா்.

ஈரோடு நசியனூா் வில்லரசம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த கல்லூரிப் பேருந்து எதிா்பாராதவிதமாக ஸ்ரீஜெயன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனா்.

இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். சா்வினை மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். ஸ்ரீஜெயனுக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.