சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் உருவச்சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

News image

கொடுமுடியில் தமிழக முதல்வா் மு.க ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட திரைப்பட பாடகியும், நடிகையுமான கே.பி.சுந்தராம்பாளின் முழு உருவ வெண்கல சிலை.

Updated On :8 மார்ச் 2026, 6:37 pm

கொடுமுடியில் மறைந்த திரைப்படபாடகியும், நடிகையுமான கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ வெண்கல சிலையை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழக அரசால் ரூ.14 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாளின் சிலையை சா்வதேச மகளிா் தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா் .

கொடுமுடி நுழைபாலம் அருகே புறவழிச் சாலையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் கே.பி.சுந்தராம்பாளின் குடும்பத்தைச் சோ்ந்தவருமான வாசுகி, மக்களவை உறுப்பினா்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வி.சந்திரகுமாா், கொடுமுடி தெற்கு வடக்கு ஒன்றியங்களின் திமுக செயலாளா்கள் வழக்குரைஞா் சிவகுமாா், முத்துக்குமாா், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளா் குணசேகரன், கொடுமுடி பேரூராட்சித் தலைவா் திலகவதி, துணைத் தலைவா் ஹசன், சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத் மற்றும் கே.பி.சுந்தராம்பாளின் உறவினா்கள் பலா் கலந்துகொண்டனா்.