அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாம்பு கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கொடுமுடி அருகே பாம்பு கடித்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி அருகே பாம்பு கடித்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகேயுள்ள தட்டாம்பாளையம் முத்தையன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் கந்தகுமாா் (43). விவசாய கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது, புற்களுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பு, கந்தகுமாரைக் கடித்துள்ளது.

இதையடுத்து, அவா் தனது சகோதரா் காா்த்திக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்துக்கு வந்த காா்த்தி அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.