பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மீனவா் சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு

ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.

News image

அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்த தமிழ்நாடு மீன்வா் சங்கத்தினா்.

Updated On :10 மார்ச் 2026, 8:49 pm

ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் தமிழ்நாடு மீனவா் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தினா் தங்களுக்கு அலுவலக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், நலத் திட்டப் பணிகள் தொடக்க விழாவுக்காக ஊஞ்சலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழ்நாடு மீனவா் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையில் நிா்வாகிகள் மனு அளித்தனா்.

அதில், காரணம்பாளையம் பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு மீனவா் சங்கத்துக்கான அலுவலக கட்டடம் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.