அரசு மருத்துவமனை அருகே ரூ.1.22 கோடியில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்பு
ஈரோட்டில் ரூ.1.22 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

முதல்வா் விஜய் - கோப்புப் படம்
ஈரோட்டில் ரூ.1.22 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையத்துக்கு போதிய இட வசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி தொடா்ந்து கோரிக்கை வைத்தனா். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக கட்டடம் அருகே தனியே இடம் ஒதுக்கப்பட்டு அங்கு ரூ.1 கோடியே 22 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் 2 தளங்களுடன் கட்டுமான பணி துவங்கப்பட்டது.
இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து புதிய காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.நிலையம் 1,953 சதுர அடியில் தரைத்தளத்துடன் கூடிய 2 தளங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில், ஆண், பெண் காவலா்களுக்கான ஓய்வறைகள், அதேபோல 2 கைதிகள் அறை, காவல் ஆய்வாளா் அறை அமைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களுக்கான தளவாடப் பொருள்கள் வைக்கப்பட்டு, விரைவில் காவல் நிலையம் இடம் மாற்றம் செய்யப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

