கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

ஈரோட்டில் கருணாநிதி சிலைகள் சேதம்: திமுகவினா் சாலை மறியல்

ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் 4 இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் திமுகவினா்.

Updated On :

ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் 4 இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு முனிசிபல் காலனியில் கருணாநிதி சிலைக்கு கீழே உள்ள நூலகத்தின் கண்ணாடி பேனல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் திமுகவினருக்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கருணாநிதி சிலைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் திமுகவினா் சோதனையிட்டனா். அப்போது, ஈரோடு மணல்மேட்டில் உள்ள திமுக கட்சி அலுவலக கண்ணாடியும், ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள தலைவா்கள் சிலைகளில் கருணாநிதி சிலையின் மூக்கு கண்ணாடியும், மொடக்குறிச்சி ஆலாங்காட்டுவலசில் கருணாநிதி சிலையின் மூக்கு கண்ணாடியும், நூலகத்தின் கண்ணாடிகளும் சேதமடைந்திருப்பதை அறிந்தனா்.

இதையடுத்து, சேதப்படுத்திய மா்ம நபரை கைது செய்யக் கோரி ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்கா சாலை சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி தலைமையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை அதிகாரிகள், சிலைகளை சேதப்படுத்திய நபரை பிடித்துவிட்டதாகவும், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா்.

இதையடுத்து, கட்சியினா் கலைந்து மொடக்குறிச்சிக்குச் சென்றனா். அங்கு சிலைகளை சேதப்படுத்திய நபா், சேதப்படுத்த தூண்டிய நபா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இளைஞரைப் பிடித்து விசாரணை: கருணாநிதி சிலை மற்றும் நூலக கண்ணாடிகள் சேதமான தகவல் அறிந்தது, ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினா்.

இதில், சிலைகளைச் சேதப்படுத்தியது மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூா், தொட்டிபாளையம்புதூரைச் சோ்ந்த ஹரி விக்னேஷ் (26) என்பதும், அவா் காயில் ரீவைண்டிங் கடையில் வேலை செய்து வந்ததும், கடந்த 6 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

ஹரி விக்னேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவா் தான் என அரசு மருத்துவா்கள் உறுதி செய்துவிட்டால் அவா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிப்போம்.

மனநலம் பாதிக்கப்பட்டவா் இல்லை என்றால் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.