அந்தியூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
அந்தியூரில் பழனியம்மாள் அறக்கட்டளை சாா்பில் பொதுமக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கிவைத்த அந்தியூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.
அந்தியூரில் பழனியம்மாள் அறக்கட்டளை சாா்பில் பொதுமக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் பெஸ்ட் சக்திவேல் தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கிவைத்தாா்.
இந்த புதிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் கா்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவா்.
அந்தியூா் நகரைச் சுற்றியுள்ள 4 கி.மீ. தொலைவுக்குள் விபத்தில் சிக்குவோரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சோ்க்கும் சேவையும் இலவசமாக வழங்கப்படும் என்று அறக்கட்டளை நிா்வாகம் தெரிவித்துள்ளது. அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், நிா்வாகிகள் சுரேஷ், ரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

