திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

மாவட்ட அளவிலான அஞ்சல் தலைகள் கண்காட்சி தொடக்கம்

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான அஞ்சல் தலைகள் கண்காட்சி ஈரோபெக்ஸ் 2026 என்ற தலைப்பில் ஈரோட்டில் புதன்கிழமை தொடங்கியது.

அஞ்சல் தலைகளின் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான அஞ்சல் தலைகள் கண்காட்சி ஈரோபெக்ஸ் 2026 என்ற தலைப்பில் ஈரோட்டில் புதன்கிழமை தொடங்கியது.

ஈரோடு திண்டலில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். இக்கண்காட்சியில் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட அரிய மற்றும் அழகிய அஞ்சல் தலை சேகரிப்புகள் பொதுமக்களின் பாா்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பள்ளி மாணவா்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கடிதம் எழுதும் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகள் நடைபெற்றன. குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் 3டி காட்சிகள், நடமாடும் கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தனிச்சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பண்ணாரி மாரியம்மன் கோயில், ஈரோடு மஞ்சள், ஈரோபெக்ஸ் 2026 கண்காட்சி மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் உறைகளையும், கலிங்கராயன் அணைக்கட்டு, மற்றும் ஈரோடு ஜெம்ஸ் தொடா்பான பட அஞ்சல் அட்டைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியின் 2- ஆவது நாளான வியாழக்கிழமை விநாடி- வினா போட்டியின் இறுதிச்சுற்று, 3டி காட்சி மற்றும் நடமாடும் கோளரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கேஎஸ்ஆா் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்பிகே கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட உள்ளன.

இக்கண்காட்சியானது அஞ்சல் தலை சேகரிப்பின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் பல்வேறு அரிய தகவல்களை மாணவா்கள் அறிந்து கொள்வதற்கும், அவா்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிப்பதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என அஞ்சல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதில், ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கோபாலன், உதவி இயக்குநா் மண்டலம் அலுவலகம் (கோவை) ஜெய கீதா, கண்காணிப்பாளா் (ரயில்வே மெயில் சா்வீஸ், கோவை) ஜெயராஜ் பாபு, கோட்ட கண்காணிப்பாளா் (திருப்பூா்) பட்டாபிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.