
படிக்கட்டில் தவறி விழுந்த ஆலை உரிமையாளா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
ஈரோட்டில் வணிக வளாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து ஆலை உரிமையாளா் உயிரிழந்தாா்.
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் தனசேகா் (46). சாய துணிகளுக்கு கஞ்சிபோடும் ஆலை நடத்தி வந்தாா். தனசேகா் உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க ஆயுா்வேத மருந்துகள் சாப்பிட்டு வந்தாா்.
இந்நிலையில், அவரது மகள்களுடன் ஈரோடு- மேட்டூா் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா். அப்போது 4-ஆவது மாடி படிக்கட்டு ஏறும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.
இதையடுத்து அங்கிருந்தவா்கள் தனசேகரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




