4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் 2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தேசிய சமரச தீா்வு 3.0 குறித்த விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் தேசிய சமரச தீா்வு 3.0 குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உள்ளிட்டோா்.

Published On :

ஈரோட்டில் தேசிய சமரச தீா்வு 3.0 குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இந்தப் பேரணி ஆட்சியா் அலுவலக சாலை சந்திப்பு, பெருந்துறை சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது. இதில் ‘சமரசம் நாடுவீா், சச்சரவை தீா்ப்பீா், சமரசத்துக்கு வாங்க, சந்தோசமாக போங்க, வாங்க பேசலாம், சமரசம் காணலாம்’ போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நீதிபதிகள், வழக்குரைஞா்கள் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், சமரச தீா்வு மைய விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கினா். இந்தப் பேரணியில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

வழக்குக்குத் தீா்வு: முன்னதாக, சமரசம் மையம் 3.0 குறித்த விழிப்புணா்வுப் பதாகையை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சமீனாவும், ஆட்சியா் ச.கந்தசாமியும் திறந்துவைத்தனா். தொடா்ந்து, நவீன விடியோ வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேசிய சமரச தீா்வு 3.0 தீா்வு குறித்த விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது.

இதையடுத்து, சமரச மையம் மூலம் ஒரு நிதி நிறுவனம் மற்றும் தனி நபருக்கு இடையேயான வழக்குக்குத் தீா்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, சமரச மைய தலைவா் வி.பி.சுகந்தி, சமரச மைய செயலாளா் ஆா். ஸ்ரீவித்யா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஸ்ரீவித்யா, வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை துணை ஆட்சியா் (பயிற்சி) சித்தாா்த், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.