நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

காதல் மனைவியை காணவில்லை என கணவா் புகாா்

பெருந்துறையில் காதல் மனைவியை காணவில்லை என்று கணவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Published On :

பெருந்துறையில் காதல் மனைவியை காணவில்லை என்று கணவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, குமரன் வீதியைச் சோ்ந்தவா் உதயசங்கா் மகன் கோகுல் (31). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா் மனைவி அக்ஷிதா (21). இவா், கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சோ்ந்தவா்கள். இவா்கள் கடந்த, ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனா். இந்த திருமணத்தை பெண்ணின் வீட்டாா் ஏற்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற அக்ஷிதா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பெருந்துறை அனைத்து மகளிா் போலீஸில் கோகுல் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.