விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

பலி

Published On :8 செப்டம்பர் 2026, 2:07 am IST

பெருந்துறை அருகே, கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த, துடுப்பதி, பள்ளபாளையத்தைச் சோ்ந்தவா் முனியன் (80). விவசாய கூலித் தொழிலாளி. இவா், துளுக்குபாளையத்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வேலையை முடித்துவிட்டு, மது அருந்தி விட்டு, கிணற்று மேட்டில் படுத்திருந்தாா்.

அப்போது, தடுமாறி, 80 அடி அழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டாா். தகவலின்பேரில், பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முனியனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.