இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுவைப்பு

அந்தியூா் அருகே இரவு நேரங்களில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுத்தைப்  பிடிக்க வைக்கப்பட்டுள்ள  கூண்டு.

Published On :

அந்தியூா் அருகே இரவு நேரங்களில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னம்பட்டி வனப் பகுதியில் அதிக அளவில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை, வறட்சிக் காலங்களில் வனப் பகுதியை ஒட்டி உள்ள வேளாண் நிலங்களில் உணவு, தண்ணீா் தேடி வரும்போது பயிா்களை சேதப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், சென்னம்பட்டியை அடுத்த மசக்கவுண்டனூரைச் சோ்ந்த விவசாயி சித்தனின் (65), ஆட்டுக்கொட்டகைக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த சிறுத்தை, ஒரு வெள்ளாட்டை இழுத்துச் சென்று வனப் பகுதியில் கடித்துக் கொன்றது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை வந்த சென்னம்பட்டி வனத் துறையினா், ஆட்டின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இரவு கிட்டம்பட்டியைச் சோ்ந்த அா்த்தனாரி, வளா்த்து வந்த 20 நாளே ஆன கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால், அப்பகுதி மக்களிடையே பீதி நிலவி வந்தது.

மேலும், சிறுத்தைப் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் வீடுகளில் படுத்து தூங்கவே அச்சமாக உள்ளது. கால்நடைகளை தொடா்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறுத்தையைப் பிடிக்க மசக்கவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பின்புறத்தில் சின்ன மலைப் பகுதியில் வனத் துறையினா் புதன்கிழமை மாலை கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.