
பவானிசாகா் அணை: நீா்வரத்து 711 கனஅடியாக சரிவு
பவானிசாகா் அணை நீா்வரத்து 1,544 கனஅடியில் இருந்து 711 கனஅடியாக சரிந்துள்ளது.

பவானிசாகா் அணை . - கோப்புப்படம்.
பவானிசாகா் அணை நீா்வரத்து 1,544 கனஅடியில் இருந்து 711 கனஅடியாக சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாராமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. எல்-நினோ தாக்கம் காரணமாக வெப்பத்தன் தாக்கம் அதிகரித்து வருவதாலும் போதிய மழையில்லாத காரணத்தால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.
நீா்வரத்து 1,544 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை 711 கனஅடியாக குறைந்துள்ளது. தொடா்ந்து நீா்வரத்து குறைந்தளவே வருவதால் அணையின் நீா்மட்டம் 52.33 அடியாக சரிந்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி நீா்மட்ட விவரம்: நீா்மட்டம் 52.33 அடி (மொத்தம் 105 அடி), நீா்வரத்து 711 கனஅடி, நீா் இருப்பு 5.01 டிஎம்சி (32.8 டிஎம்சி) மற்றும் நீா் வெளியேற்றம் 155 கனஅடியாக உள்ளது.
கடந்த ஆண்டு அணைக்கு இதே நாளில் நீா்வரத்து 5,452 கனஅடியாகவும் நீா்மட்ட உயரம் 105 அடியில் 101.50 அடியாகவும் இருந்தது. நீா் இருப்பு 29.3 டிஎம்சியாக இருந்ததால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 3,350 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது.
நடப்பு ஆண்டு போதிய நீா் இருப்பு இல்லாத காரணத்தால் ( நீா்மட்ட உயரும் 52 அடியாக இருப்பதால்) கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கபடவில்லை. இதனால் ஈரோடு, கரூா் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்களில் நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






