புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆசனூா் அருகே சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானை

ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானையால் அந்தப் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசனூா்  சாலையில்  நின்று  கரும்பை  ருசிக்கும்  யானை.

Published On :

ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானையால் அந்தப் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள், ஆசனூா் வழியாக சத்தியமங்கலம் கரும்பு ஆலைகளுக்கு தினந்தோறும் செல்கின்றன. அடா்ந்த காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் கரும்பு லாரிகளை யானைகள் வழிமறித்து லாரியில் இருக்கும் கரும்புகளைப் பறித்து சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில், கா்நாடகத்தில் இருந்து ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக சனிக்கிழமை வந்த கரும்பு லாரியை நோக்கி யானை ஓடி வந்ததைப் பாா்த்து ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டாா். அங்கு வந்த யானை கரும்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து காட்டுக்குள் சென்றது.

அதைத் தொடா்ந்து அடுத்த நிகழ்வாக, மற்றொரு யானை காரப்பள்ளம் சாலையின் நடுவே நின்று கரும்புகளை ருசி பாா்த்தது. அப்போது, சாலையின் இருபுறமும் நின்ற வாகன ஓட்டிகள் யானையை விரட்ட ‘ஹாரன்’ அடித்தனா். அங்கிருந்த ஒரு இளைஞா், யானையைத் தொந்தரவு செய்ய வேண்டாம், இன்னும் 4 துண்டு கரும்புதான் இருக்கிறது. சாப்பிட்டவுடன் யானை தானாக காட்டுக்குள் சென்றுவிடும் என வாகன ஓட்டிகளிடம் கெஞ்சும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.