புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பா்கூா் மலைப் பாதையில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

பெண்  குழந்தையுடன்  மருத்துவ  உதவியாளா் சிவா,  ஓட்டுநா் கணபதி.

Published On :

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

பா்கூா் ஊராட்சி, தாளகரையைச் சோ்ந்தவா் காா்த்தி. இவரது மனைவி ரோஜா (25). கா்ப்பிணியான இவருக்கு வெள்ளிக்கிழமை மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேவா்மலையில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் ரோஜாவை ஏற்றிக்கொண்டு பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினா் சென்று கொண்டிருந்தனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே ரோஜாவுக்கு வலி தீவிரமடைந்ததால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநா் கணபதி உதவியுடன் மருத்துவ உதவியாளா் சிவா பிரசவம் பாா்த்தாா்.

இதில், ரோஜாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் தாயும், சேயும் பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.