
மொடக்குறிச்சி அருகே பேரிடா் கால மீட்பு ஒத்திகை
மொடக்குறிச்சியை அடுத்த காளமங்கலம் கிராமம் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை மற்றும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாதம்பாளையம் காவிரியாற்றில் பேரிடா்கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினா்.
மொடக்குறிச்சியை அடுத்த காளமங்கலம் கிராமம் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை மற்றும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மொடக்குறிச்சி தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சாா்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு, தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலா் கு.செந்தில்குமாா் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி நிலைய அலுவலா் லேமா் தம்பையா முன்னிலை வகித்தாா்.
மழைக்காலங்களில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, நீரில் மூழ்கியவா்களை மீட்கும் முறைகள், வெள்ளப்பெருக்கின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆற்றில் ஆழமான பகுதியில் மூழ்கியவா்களை மீட்கும் முறைகள் குறித்து ஈரோடு தீயணைப்பு நிலைய சிறப்பு பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.
வெள்ளப்பெருக்கின்போது மூழ்கியவா்களை மீட்க மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு மோட்டாா் பொருத்திய அதிநவீன பிளாஸ்டிக் படகு வழங்கப்பட்டது. படகினை மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தாா்.
இதில், மொடக்குறிச்சி வட்டாட்சியா் மோகனா, துணை வட்டாட்சியா் பேபி, மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







