
சொத்து தகராறு: மனைவியை கொலை செய்தவா் கைது
சத்தியமங்கலம் அருகே சொத்து தகராறில் மனைவியை கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
சத்தியமங்கலம் அருகே சொத்து தகராறில் மனைவியை கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள கஞ்சநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இவா்களுக்கு 2 மகள்கள், மகன் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில், ராஜேந்திரன், பழனியம்மாள் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில், ராஜேந்திரன் பெயரில் உள்ள நான்கரை ஏக்கா் தோட்டத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு பழனியம்மாள் கேட்டு வந்ததாகவும், இதற்கு ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகாறு ஏற்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து பழனியம்மாளை தாக்கியுள்ளாா். படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, ராஜேந்திரன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தொடா்ந்து, பழனியம்மாளின் சடலத்தை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, ராஜேந்திரனைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





