ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஈரோடு, திருப்பூா் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள்

ஈரோடு, திருப்பூா் வழியாக திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளன.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :

ஈரோடு, திருப்பூா் வழியாக திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளன.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால் ஈரோடு, திருப்பூா் வழியாக திருவனந்தபுரம் வடக்கு-சந்திரகாச்சி (கொல்கத்தா) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு-சந்திரகாச்சி (ரயில் எண் 06081) வாராந்திர சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து அக்டோபா் 2 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும். மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.45 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சந்திரகாச்சி-திருவனந்தபுரம் வடக்கு (ரயில் எண் 06082) வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் நவம்பா் 2- ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்படும். மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.