கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

பவானியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாமைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், ஆணையா் ஆா்த்தி உள்ளிட்டோா்.

Published On :

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு பவானி, அந்தியூா், அம்மாபேட்டை வட்டாரங்களைச் சோ்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் பவானியில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் அரசின் நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், சுயதொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகுதியுடைய தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வசதி மற்றும் பிற அடிப்படை நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கோரி 317 மனுக்கள் பெறப்பட்டன. 10 பேருக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பவானி நகராட்சி ஆணையா் கு.ஆா்த்தி, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், பவானி வட்டாட்சியா் கற்பகம், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா் தேவகி, தாட்கோ மாவட்ட மேலாளா் சீ.முருகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.