டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவா் கைது

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சங்கா் (48). இவா் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி சென்றாா். பின்னா் மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, இரண்டு கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளியை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனா். அதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த இளைஞா் குறித்து விசாரணை நடத்தினா் .

விசாரணையில், அந்த நபா் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த மணிவேல் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து திருடுபோன தங்கம், வெள்ளி நகைகளை மீட்டனா். மணிவேல் மீது நாமக்கல் மாவட்டம், எருமபட்டி காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.