குன்னூர் தபால் நிலையச் சாலையில் உலா வரும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்துக் கொட்ட வசதியாக வார்டுகள் தோறும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தொட்டிகள் மாயமாகி விட்டதால் தொட்டி இருந்த இடத்தில் சிலர் குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றனர்.
தபால் நிலையச் சாலையில் குப்பைகளில் உள்ள கழிவுகளை ருசி பார்க்க காட்டுப்பன்றிகள் வருகின்றன. இவற்றின் அச்சுறுத்தலால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். குப்பைகளைக் கிளறி சிதறடிக்கும் காட்டுப் பன்றிகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







