
நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 144 பேர் எழுதவில்லை. மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் தேர்வு எழுதத் தகுதியான 3,743 பேரில் 3,629 பேர் மட்டும் தேர்வு எழுதியுள்ளனர்.
மாவட்டத்தில் உயிரியல் தேர்வு எழுத வேண்டிய 1,627 பேரில் 1,586 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 41 பேர் தேர்வு எழுதவில்லை. தாவரவியல் தேர்வில் தேர்வு எழுத வேண்டிய 1,332 பேரில் 1,286 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 46 பேர் தேர்வு எழுதவில்லை. வரலாறு தேர்வு எழுத வேண்டிய 549 பேரில் 527 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 22 பேர் எழுதவில்லை. வணிக கணிதம் தேர்வில் தேர்வு எழுத வேண்டிய 176 பேரில் 173 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 3 பேர் எழுதவில்லை. மின் இயந்திரங்களும், சாதனங்களும் தேர்வில் 35 பேரில் 33 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 2 பேர் எழுதவில்லை. பொது இயந்திரவியல் தேர்வில் மட்டும் தேர்வு எழுத வேண்டிய 24 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
தனித் தேர்வர்களைப் பொறுத்தவரை வரலாறு பாடத் தேர்வு எழுத வேண்டிய 74 பேரில் 71 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 3 பேர் தேர்வு எழுதவில்லை. மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொறுத்த வரையில் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் சலுகைகளைப் பெற்று 22 பேர் தேர்வெழுதியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



