வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

உதகை அருகே நடைபெற இருந்த 2  குழந்தை திருமணங்கள் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

Published On :

உதகை அருகே நடைபெற இருந்த 2  குழந்தை திருமணங்கள் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பான விவரம் வருமாறு: 
உதகை அருகேயுள்ள மஞ்சக்கொம்பை கிராமத்தில் 18 வயது நிறைவடையாத 2 சிறுமியருக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக, அருவங்காட்டிலுள்ள கிராமிய அபிவிருத்தி மையத்தில் இயங்கி வரும் சைல்டு லைன் அமைப்புக்கு புதன்கிழமை காலை தகவல் வந்துள்ளது. இதையடுத்து கிராமிய அபிவிருத்தி மையத்தின் தலைவர் என்.கே.பெருமாள் சைல்டு லைன் அமைப்பின் பிரதிநிதிகளான பிரியா, கங்கா, வைத்தீஸ்வரன் ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டார்.
சைல்டு லைன் அமைப்பின் பிரதிநிதிகள் மஞ்சக்கொம்பை கிராமத்துக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து மேலூர் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார்,  போலீஸார், பெண் போலீஸார் உள்ளிட்டோர் திருமணம் நடைபெறவிருந்த இடத்திற்குச் சென்று நடைபெற இருந்த 2 குழந்தைத் திருமணங்களையும் தடுத்து நிறுத்தினர். 
2 சிறுமிகளும் குழந்தைகள் நலக் குழுவினர் முன்பாக  ஆஜர்படுத்தப்பட்டு அருகிலுள்ள அன்னை சத்யா காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.  
இந்த சிறுமிகள் இருவரும் பள்ளிப் படிப்பைத் தொடர கிராமிய அபிவிருத்தி இயக்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.