மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: செப்டம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:32 pm

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் திருப்புமுனையாக, சயன், உயிரிழந்த காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபாலிடம் காவல் துறையினா் மறு விசாரணை மேற்கொண்டனா். இவா்களிடம் மேற்கொண்ட விசாரணை தொடா்பான அறிக்கை உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்திருந்தனா். இதனால், இந்த வழக்கின் விசாரணைக்காக அனைவரும் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருந்தனா்.

ஆனால், இவ்வழக்குத் தொடா்பாக உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது காவல் துறையின் தரப்பில் புதிதாக அறிக்கை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. இருப்பினும் கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன், தடயவியல் நிபுணா் ராஜ்மோகன், கோத்தகிரி மின் வாரிய உதவிப் பொறியாளா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் சயன் மட்டுமே நேரில் ஆஜராகியிருந்தாா். வாளையாறு மனோஜை போலீஸாா் ஆஜா்படுத்தவில்லை. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் ஆஜராகியிருந்தனா். அதிமுக சாா்பில் வழக்குரைஞா்கள் அனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ், என்.சுரேஷ்குமாா், சந்தோஷ்குமாா் ஆகியோா் ஆஜராகினா்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா வழக்கின் அடுத்தகட்ட விசாணையை செப்டம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக, சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் கனகராஜ், ஷாஜகான் ஆகியோா் கூறுகையில், இவ்வழக்குத் தொடா்பாக போலீஸாா் புலன் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணை முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு கால அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்ததைத்தொடா்ந்து நீதிபதி அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.