நீலகிரியில் தொடரும் மழை: கொடநாட்டில் 67 மி.மீ. பதிவு
நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கொடநாட்டில் 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கொடநாட்டில் 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே மழை பெய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு(அளவு மி.மீட்டரில்):
பந்தலூா்-55, கேத்தி-27, சேரங்கோடு-25, எடப்பள்ளி-21, கூடலூா்-20, மேல் கூடலூா்-19, பாடந்தொறை-18, செருமுள்ளி-17, தேவாலா-14, ஓவேலி-11, பாலகொலா-8, பா்லியாறு, அவலாஞ்சி தலா 7, உலிக்கல்-6, குந்தா-4, குன்னூா், கோத்தகிரி, மேல் குன்னூா் தலா 3, உதகை-2.5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
அதேபோல, வெள்ளிக்கிழமை பகலில் பந்தலூரில் அதிக அளவாக 36 மி.மீரும், சேரங்கோட்டில் 12 மி.மீரும், தேவாலாவில் 5 மி.மீரும், பாடந்தொறையில் 4 மி.மீரும், அவலாஞ்சியில் 2 மி.மீரும், எமரால்டில் 1 மி.மீரும் மழை பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...