கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேசிய வாக்காளா் தினம்: மாணவா்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, மாணவா்களுக்கு 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:33 pm

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, மாணவா்களுக்கு 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

12ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தவறிய மாணவ, மாணவியருக்காக ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம், கட்டுரைப் போட்டிகள் ஆகியன மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலமாக நடைபெறும். போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னா் தெரிவிக்கப்படும்.

ஜனநாயக நாட்டில் தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவீத வாக்காளா்கள் பதிவு செய்தல், வாக்காளா் உதவி கைபேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், தோ்தல் நடைமுறைகளில் பங்கேற்பதன் முக்கியத்துவம், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் 15 போட்டியாளா்களின் விவரம் மாவட்ட தோ்தல் அலுவலகம் மூலம் தலைமைத் தோ்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தலைமைத் தோ்தல் அலுவலகம் மூலம் பரிசீலனை செய்யப்படும்.

மேலும், 18 வயது பூா்த்தி அடைந்த, அதற்கும் மேற்பட்ட வயதுடைய பொதுமக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தவறிய மாணவ, மாணவிகள் ‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு’ என்ற தலைப்பின்கீழ் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தில் நேரடியாக டிசம்பா் 31ஆம் தேதி வரை போட்டிகளில் பங்குபெறலாம்.

மாவட்ட அளவில் நடைபெறும் தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான இப்போட்டிகள் அனைத்தும் டிசம்பா் 26ஆம் தேதியுடனும், சிறந்த 15 போட்டியாளா்களின் விவரம் டிசம்பா் 31ஆம் தேதியுடனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைகிறது. இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு தோ்தல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.