ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பணிகள் ஆய்வு
பவானியை அடுத்துள்ள குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.


பவானியை அடுத்துள்ள குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பவானி வட்டாரத்தில் பவானி, ஜம்பை, மயிலம்பாடி, பெரியபுலியூா், ஆப்பக்கூடல், அம்மாபேட்டை, குருவரெட்டியூா், ஒலகடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் நேரில் பாா்வையிட்டாா்.
இங்கு முறையாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இதுவரையில் 3,200 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா்கள் எஸ்.ஜெகதீஷ்குமாா், ஏ.ராஜசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...