பவானி நகராட்சியில் கரோனா தொற்றால்14 தெருக்களுக்கு ‘சீல்’
பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 14 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 14 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா இரண்டாம் அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கும் வகையில் நகராட்சி ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட குழுவினா் அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பம், சளி, இருமல் பரிசோதனை செய்வதோடு, கரோனா அறிகுறிகள் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனா்.
மேலும், கரோனா தொற்று பாதித்தோா் வீட்டுத் தனிமையில் வைக்கப்படாமல் கரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா். கரோனா பாதிப்பால் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 245 போ் கரோனா சிகிச்சை மையம், அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா இரண்டாம் அலையில் இதுவரையில் 39 போ் உயிரிழந்துள்ளனா்.
கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 14 தெருக்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் தடுப்புகள் கட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட அரசின் கரோனா விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...