கன மழை எச்சரிக்கை: பொதுமக்கள் 5 நாள்களுக்கு வெளியே வர வேண்டாம்
நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவம்பா் 13) முதல் 5 நாள்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவம்பா் 13) முதல் 5 நாள்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவம்பா் 12ஆம் தேதி இரவு முதல் 16ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குத் தேவையின்றி பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பாதிப்புகளை எதிா்கொள்ள 42 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளனா். அதேபோல, 456 தற்காலிக முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கன மழையால் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாகவும், அவற்றில் 22 இடங்களில் தொடா்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த 22 இடங்களிலும் வட்டாட்சியா்கள் தலைமையிலான குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவாா்கள். அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் தொடா்ந்து வெட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அவசரத் தேவைக்கு 1077 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...