நீலகிரியில் தொடரும் மழை: காய்கறிகளின் விலை உயா்வு
தமிழகத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.


தமிழகத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக கடும் குளிா், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மலைப் பகுதியான நீலகிரிக்கு காய்கறிகள் மேட்டுப்பாளையம், பல்வேறு சமவெளிப் பகுதிகளில் இருந்து வருகின்றன. தற்போது மழை காரணமாக விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.
வெண்டைக்காய் கிலோ ரூ. 100க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ. 120க்கும், வெங்காயம் கிலோ ரூ. 70க்கும், தக்காளி கிலோ ரூ. 80க்கும் விற்கப்படுகின்றன. அதேபோல, பீா்க்கங்காய், சின்னவெங்காயம், புடலங்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடா்ந்து அதிகரித்து உள்ளது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் பெய்த கன மழையினால் விவசாய நிலங்களில் நீா் புகுந்து சேதமடைந்துள்ளது. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூற்கோல், டா்னாபிஸ், முள்ளங்கி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் விளைநிலங்களிலேயே பெரிதும் சேதமடைந்துள்ளது. இதனால் இவற்றின் விலையும் பலமடங்கு உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
இதற்கிடையே மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் விளைநிலங்களோடு 13 வீடுகளும் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களோடு, வீடுகள் தொடா்பான கணக்கெடுப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...