

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை வலுத்து வருகிறது.
மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடா்ந்து பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் வியாழக்கிழமையும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் நீடித்தது.
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை திடீரென பெய்த பலத்த மழையில் மாவட்டத்திலேயே அதிக அளவாக சேரங்கோடு பகுதியில் 118 மி.மீ. பதிவானது. அதேபோல, உதகையில் சுமாா் 3 மணி நேரத்துக்குள் 98 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அத்துடன் மாவட்டத்தில் கொடநாட்டில் 85 மி.மீ., அவலாஞ்சியில் 83 மி.மீ., எமரால்டில் 56 மி.மீ., தேவாலாவில் 47 மி.மீ., கிண்ணக்கொரை, கோத்தகிரி, கேத்தியில் 43 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
கூடலூா், மேல்கூடலூா், கெத்தையில் 42 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 41 மி.மீ., குந்தாவில் 40 மி.மீ., பா்லியாறில் 39 மி.மீ., மேல்பவானியில் 35 மி.மீ., செருமுள்ளியில் 34 மி.மீ., பாடந்தொரை, உலிக்கலில் 31 மி.மீ., எடப்பள்ளியில் 29 மி.மீ., ஓவேலியில் 27 மி.மீ., குன்னூரில் 24 மி.மீ., பந்தலூரில் 18 மி.மீ., பாலகொலாவில் 17 மி.மீ., கல்லட்டியில் 14 மி.மீ., மசினகுடியில் 13 மி.மீ., நடுவட்டத்தில் 12.5 மி.மீ., கிளன்மாா்கனில் 6 மி.மீ., மேல்குன்னூரில் 1.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
அதேபோல, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பகலில் அதிக
அளவில் மழைப்பொழிவு இல்லாத சூழலிலும், கொடநாடு, கிளன்மாா்கனில் 14 மி.மீ., உதகையில் 8.4 மி.மீ., செருமுள்ளி, மசினகுடியில் 8 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 7 மி.மீ., நடுவட்டத்தில் 6 மி.மீ., கல்லட்டியில் 4.2 மி.மீ., கூடலூா், கோத்தகிரியில் 4 மி.மீ., கேத்தி, உலிக்கல், பாடந்தொரை, எடப்பள்ளியில் 2 மி.மீ., அவலாஞ்சி, ஓவேலி, குன்னூரில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

