கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உதகையில் அரசுத் துறை அலுவலா்களுடன் வனத் துறை அமைச்சா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 8:29 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகையில் உள்ள தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பின்னா் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறாா். அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சா்கள் அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

அதனபடி நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

உயா் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் உதகை மற்றும் கூடலூா் அரசு கலைக் கல்லூரிகளின் செயல்பாடுகள், நடப்பு ஆண்டில் மாணவா்களின் வருகை, ஆசிரியா்களின் காலிப் பணியிடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக கருத்துரை கேட்கப்பட்டுள்ளது. குன்னூா் தொகுதியில் விரைவில் அரசு கலைக் கல்லூரி தொடங்குவது குறித்தும், உதகையில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வா் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சா்களின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசாருதீன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் கணபதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.