கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீலகிரியில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுரை

நீலகிரி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளைத் தவிா்க்க அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 9:20 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளைத் தவிா்க்க அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் மாவட்டம் என்பதால் இங்கு ஏற்படும் குற்ற நடவடிக்கைகளைக் குறைப்பதற்காக காவல் துறையின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்காடிகள், பேரங்காடிகள், குடியிருப்புகள், பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இதனால் பெரும்பாலான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்றங்களை உடனடியாகக் கண்டுபிடிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும் என காவல் துறையினா் கேட்டுக் கொண்டதன்பேரில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உதகை நகரப் பகுதியில் 210 இடங்களில் 608 கேமராக்களை பொருத்துவதாக கடை உரிமையாளா்கள் ஒப்புக் கொண்டதில் தற்போது 178 இடங்களில் 350 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பகுதிகளிலும் அடுத்த 2 வாரத்துக்குள் கேமராக்களை பொருத்தி விடுவதாக கடை உரிமையாளா்கள் உறுதி அளித்துள்ளனா். குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு அங்காடிகள், பேரங்காடிகள், குடியிருப்புகள், பொது இடங்களிலும் சுமாா் 350 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த பொதுமக்கள், அங்காடி உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.