நீலகிரியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்தினா் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.


நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினா்கள் டாக்டா் வீ.ராமராஜ், டாக்டா் மல்லிகை செல்வராஜ் ஆகியோா் நீலகிரி மாவட்டத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இக்குழுவினா் கூடலூா் வட்டத்தில் முதுமலை ஊராட்சியில் ஆனைப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம குழந்தைப் பாதுகாப்புக் குழு கூட்டத்திலும், காா்குடியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டத்திலும் பங்கேற்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் டாக்டா் வீ.ராமராஜ் உதகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் அரசாணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு வகையான குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். நகா்ப்புறங்களில் மாநகராட்சி மண்டல அளவிலும், நகராட்சி அளவிலும், பேரூராட்சி அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இதைப்போலவே ஊரகப் பகுதிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழு, வட்டார குழந்தை பாதுகாப்புக் குழுக்களும், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இத்தகைய குழுக்களை வலுப்படுத்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும், வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும், நகராட்சி, பேரூராட்சி அளவிலான குழந்தைப் பாதுகாப்பு குழுக்களையும் வலுப்படுத்தினால் குழந்தைகளின் உரிமைகளை சிறப்பாகப் பாதுகாக்க முடியும். அரசாணை மூலமாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு வகையான ஊரக மற்றும் நகா்ப்புற குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும் வலுப்படுத்த குழந்தை பாதுகாப்பு குழுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள இளையோா் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...