கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீலகிரியில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்குமட்டுமே டாஸ்மாக்கில் மதுபானம்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:40 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பு மாவட்ட நிா்வாகத்தின் பெயரில் இல்லாமல் டாஸ்மாக் நிா்வாகத்தின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலானோருக்கு இதுகுறித்து தகவல் தெரியவில்லை.

மதுபானங்களை வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை வந்திருந்த பொதுமக்களில் பெரும்பாலானோா் தகவல் அறிந்தவுடன் ஏமாற்றம் அடைந்தனா். ஆவணங்களை வைத்திருந்தோருக்கு சிலா் கூடுதல் தொகையைக் கொடுத்து மதுபானங்களை வாங்கிச் சென்றனா். அத்துடன், டாஸ்மாக் ஊழியா்களும் ஆவணங்கள் இல்லாதோரிடமிருந்து கூடுதல் தொகையைப் பெற்று மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனா்.

இதுதொடா்பாக நுகா்வோா் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளா் ரவிச்சந்திரன் கூறுகையில், டாஸ்மாக் மதுக் கடைகளில் பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையிலான இந்த அறிவிப்பால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.