கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞா் மீது தாக்குதல்: தாய், 2 மகன்களுக்கு 4ஆண்டுகள் சிறைத் தண்டனை

 இளைஞரைத் தாக்கிய வழக்கில் தாய் மற்றும் 2 மகன்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:51 pm

DIN

 இளைஞரைத் தாக்கிய வழக்கில் தாய் மற்றும் 2 மகன்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உதகை, நொண்டி மேடு பகுதியைச் சோ்ந்தவா் விசாலாட்சி (49). இவரது மகன்கள் உதயகுமாா் (28), ரஞ்சித்(30). இவா்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவா் வினோத் (27). கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று விசாலாட்சி, வினோத் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், விசாலாட்சி மற்றும் அவரது இரு மகன்களும் சோ்ந்து தாக்கியதில் வினோத்தை படுகாயம் அடைந்து உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக உதகை நகர போலீஸாா் பதிவு செய்த வழக்கு உதகை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சதாசிவம் வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில், விசாலாட்சி மற்றும் அவரது மகன்கள் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.