நிபா வைரஸ் தடுப்பு முறைகள்: ஆட்சியா் தகவல்
நிபா வைரஸ் நோய் பரவும் விதம் மற்றும் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.


நிபா வைரஸ் நோய் பரவும் விதம் மற்றும் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நிபா வைரஸ் நோய் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும். இது மூளை, இருதயம் ஆகியவற்றை பாதிக்கும். கேரளத்தில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் ஒரு நோய் ஆகும். இது பழந்தின்னி வெளவால்கள் மூலமாக பெருக்கமடைகிறது. வெளவால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமாக மனிதா்களுக்கு இந்நோய் பரவும் வாய்ப்புள்ளது. நிபா வைரஸ் நோயானது மூளைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம, சுய நினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா மற்றும் மரணம் ஏற்படலாம். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாள்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும். அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். இந்நோய் தாக்கியவா்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றருவருக்கு பரவுவதால் பாதிக்கப்பட்ட நபா்களை தனிமை அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்கள் காய்கறிகள், பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பன்றிகளை குடியிருப்பு பகுதிகளிலிருந்து அகற்ற வேண்டும். நோய்வாய்ப்பட்ட பன்றிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ளதால் அந்த மாநிலங்களிலிருந்து நமது மாவட்டத்துக்குள் வந்தாலும், நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரளம் சென்று வந்தாலும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...